பதிவு செய்த நாள்
31
ஜன
2017
12:01
சுங்குவார்சத்திரம்: பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரத்தில், 1,000 பேருக்கு இலவச ராஜயோக தியான பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. பிரம்மகுமாரிகள் இயக்கம் துவங்கி, 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, சுங்கு வார்சத்திரம் அருகே உள்ள பொடவூர் கிராமத்தில், பிரம்மகுமாரிகள் இயக்கத்தின், ஹாப்பி வில்லேஜ் மையத்தில், நேற்று தியானப் பயிற்சி முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற, 1,000 பேருக்கு, மன இறுக்கம் நீக்கும் வழிகள், மகிழ்ச்சியின் திறவு கோல், இறைவனோடு பேரானந்த அனுபவம் என்னும் தலைப்புகளில், இலவச ராஜயோக தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இலவச தியான பயிற்சி முகாமை, மூத்த ராஜயோகப் பயிற்சியாளர் கலாவதி, தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.