பதிவு செய்த நாள்
31
ஜன
2017
12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வைணவ தலங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நாளை காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில், வைணவ தலத்தில் முக்கியமானதாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது, உலகளந்தப் பெருமாள் கோவில் விளங்குகிறது. இதன் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் தை மாதம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவம், நாளை காலை, 5:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில், முக்கிய நிகழ்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை கருட சேவைவயும், 7ம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. 10ல் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தினமும் காலை, இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.