பதிவு செய்த நாள்
01
பிப்
2017
12:02
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை, ராகுகால பூஜை நடந்தது. காலை முதல், மாலை வரை திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.