தேவகோட்டை: தேவகோட்டையிலிருந்து பழநிக்கு தைப்பூச விழாவிற்காக ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக 500ஆண்டுகளுக்கு மேலாக செல்கின்றனர். தொடர்ந்து இவ்வாண்டு பழநி பாதயாத்திரை நாளை புறப்படுகின்றனர். முன்னதாக பாதயாத்திரைக்காக நகர பள்ளிக்கூடத்தில் காவடிகள் கட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பிப்.1ந்தேதி நகர் வலம் செய்து சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதியை அடைந்தது. சிறப்பு பூஜைகளுக்கு நாளை காலை தேவகோட்டையிலிருந்து பழநிக்கு காவடிகள் புறப்படுகிறது. காவடி யாத்ரீகர்களோடு தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உட்பட பல ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை புறப்படுகின்றனர்.