பதிவு செய்த நாள்
02
பிப்
2017
02:02
கரூர்: உலக அமைதி வேண்டி, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், சிறப்பு யாகம் நடந்தது. கரூர் மாவட்டம், நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்துக்கு, வாரம்தோறும் வியாழன் மற்றும் பவுர்ணமி நாட்களில், காவிரி நீரால் அதிஷ்டானத்துக்கு ஆராதனை நடத்தப்படும். இங்கு, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்ட மக்கள் சார்பில், உலக நன்மை, இயற்கை வளங்கள் காத்தல், மழை பெய்தல், பொதுஅமைதி போன்ற காரணங்களுக்காக, நேற்று மஹா ருத்ர யாகம் நடந்தது. அதில், 121 வேத விற்பனர்கள் பங்கேற்று, 1,331 முறை ருத்ரலாயம் சொல்லி யாகம் நடத்தினர். தொடர்ந்து, மஹா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.