பதிவு செய்த நாள்
11
பிப்
2017
12:02
வெண்ணெய்மலை: வெண்ணைமலை, முருகன் கோவில் அருகில், தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கரும்புகளை, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் வாங்கிச் சென்றனர். வெண்ணைமலை கரும்பு வியாபாரி மாரிமுத்து கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், ஆலை கரும்புகள்தான் பயிரிடப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் செங்கரும்புகளை பயிரிடுவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் காவிரி, அமராவதி ஆறுகள் வறண்டதுதான். இதனால், புரோக்கர்கள் மூலம், தேனி மாவட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கரும்புகளை ஜோடி, 30 ரூபாய்க்கு வாங்கி, 50 ரூபாய் வரை விற்றோம். நேற்று மாலை, வெண்ணைமலை முருகன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதால், ஜோடி செங்கரும்பு, 20 ரூபாய்க்கு விற்றோம். இவ்வாறு அவர் கூறினார்.