பதிவு செய்த நாள்
11
பிப்
2017
12:02
ஈரோடு: ராமானுஜர், 1,000வது ஜெயந்தி விழா, ஈரோட்டில், பெருந்துறை சாலை பரிமளம் மஹாலில், 17ல் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜையுடன் விழா துவங்குகிறது. மறுநாள் (18ம் தேதி) காலை, 7:00 மணிக்கு சேவா காலமும், 9:00 மணிக்கு கண்காட்சியும் திறக்கப்படுகிறது. ஈரோடு செங்குந்தர் பிரைமரி பள்ளியில், அன்று மாலை, 3:00 மணிக்கு ரத யாத்திரை துவங்குகிறது. இதை ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் ரங்க நாராயணன் துவக்கி வைக்கிறார். ரதயாத்திரை ஜி.ஹெச் ரவுண்டானா, கலெக்டர் ஆபீஸ், குமலன்குட்டை, வில்லரசம்பட்டி பிரிவு, யு.ஆர்.சி. நகர் வழியாக மண்டபத்தை அடைகிறது. ஆரத்தி எடுக்க, 15 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கற்பூர ஆரத்தி சேவை நடக்கும். இதை தொடர்ந்து, 19ல் காலை, 6:00 மணிக்கு கோபூஜை, 7:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், 8:30 மணிக்கு ஹயக்ரீவர் வித்யார்த்தி ஹோமம் நடக்கிறது. காலை, 11:00 மணி முதல் நாட்டிய நாடகம், பஜனை, இசை கச்சேரி, உபன்யாசம், நாடகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமானுஜர், ஆயிரமாவது ஜெயந்தி விழாக்குழுவினர் செய்கின்றனர்.