ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி மாகாளியம்மன் பொங்கல் விழாவையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் குண்டம் மற்றும் பொங்கள் விழா கடந்த மாதம், 21ல் பூச்சாட்டு தலுடன் துவங்கியது. கடந்த வாரம் முதல் அம்மன் முத்துப்பல்லாக்கு திருவீதி உலா, தீர்த்தம் எடுத்தல், குண்டம் பற்ற வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. காளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கியும், பொங்கல் வைத்தும் மாகாளியம்மனை வழிபட்டனர். இன்று காலை, 7:00 மணிக்கு மறு பூஜை நடக்கிறது.