திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில், பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை போல், திருக்கழுக்குன்றத்திலும் கிரிவலம் மாதந்தோறும் நடைபெறுகிறது. 2017ம் ஆண்டின் மாசி மாதம் பவுர்ணமி, நேற்று முன் தினம் இரவு துவங்கியது. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருக்கழுக்குன்றத்தை சுற்றியுள்ள கிராமத்தினர், வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். வேதகிரீஸ்வரர் மலையடிவாரத்தில் உள்ள அரசடி விநாயகர், சொக்கம்மன் உள்ளிட்ட கோவில்களில் பவுர்ணமியை ஒட்டி, மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமிகள், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.