பழநி;பழநி மலைக்கோயில் முதலாம் எண் வின்ச் பராமரிப்பு பணிகள் முடிந்து சிறப்பு பூஜையுடன் இயக்கப்பட்டது. பழநி முருகன் கோயிலில் நாள்தோறும், காலை 5 மணி முதல்இரவு 10 மணி வரை மூன்று வின்ச்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதலாம் எண் வின்ச் பராமரிப்பு பணிக்காக கடந்த மார்ச் 7ல் நிறுத்தப்பட்டது. தேய்மானம் அடைந்த கம்பி வடம் மாற்றப்பட்டு, உருளை, சக்கரங்களில் ஆயில் இட்டு 2 நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை பெட்டிகளில் எடைக்கற்கள் வைத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது. இணை ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலையில், முதலாம் எண் வின்ச்-ல் சிறப்புபூஜை செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது.