பதிவு செய்த நாள்
21
ஏப்
2017
12:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த, கால பைரவர் கோவில், 151 கிராம மக்களின் குலதெய்வமாக உள்ளது. இக்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் குழு கூட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ஜெயவேல் தலைமை வகித்தார். கவுரவ தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சேகரன், தர்மகர்த்தாக்கள் திப்பம்பட்டி கிருஷ்ணமூர்த்தி, பையனப்பள்ளி முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், பர்கூர் யூனியன் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஜெயராமன், செயலாளர் மணி, பொருளாளர் சங்கர், துணைத் தலைவர்கள் பைரன், பைரவசாமி, கோபால், மாரியப்பன், முத்தாச்சாரி, துணை பொதுச் செயலாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கிருஷ்ணகிரி கால பைரவர் கோவில் வர்ணம் பூசி, 10 லட்ச ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேகம் செய்வது; கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோவில் வளாக தடுப்புச்சுவர் கட்ட நிதி வழங்கிய செங்குட்டுவன் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி தெரிவிப்பது என்பன பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.