குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா நாதரை, கல்யாண நாராயணர் என அழைக்கிறார்கள். இவரது இன்னொரு திருநாமம், ஸ்ரீநாத்ஜி, இவர் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். தாயாரின் திருநாமம் லட்சுமி ஸ்ரீ எனும் கல்யாண நாச்சியார். இங்கே கண்ணபிரானின் எட்டு மனைவியரான ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, சத்யா, காலிந்தி, லட்சுமணா, மித்ரா விந்தா, பத்ரா ஆகிய எண்மருக்கு தனித்தனி சந்நதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.