மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2017 12:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.,28) முதல் மே 9 வரை நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம் வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் மே 7 காலை 8:30 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக கட்டணமில்லா தரிசன முறையில் அனுமதிக்கப்படுவர். www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் இன்று முதல் மே 2 வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிநாட்டு பக்தர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பக்தர்கள் பிரதான டிக்கெட் விற்பனை நிலையத்தில் முன்பதிவு செய்யலாம். உற்சவத்தை தரிசிக்க 500, 200 ரூபாய் கட்டணச்சீட்டு பெற விரும்புபவர்கள் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு வர வேண்டும். இணை ஆணையர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியும் முன்பதிவு செய்யலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.