புதுச்சேரி : முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண மண்டபத்தில், ஈஷா யோகா வகுப்பு இன்று (3ம் தேதி) துவங்கி, ஒரு வாரம் நடக்கிறது. புதுச்சேரியில் ஈஷா யோகா இறைநிலை யோகா வகுப்பு, முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஆறுமுகா திருமண மண்டபத்தில் 7 நாட்கள் நடக்கிறது.
இன்று (3ம் தேதி) மாலை 6:30 மணிக்கு அறிமுக உரையுடன் துவங்கும் யோகா வகுப்பு, 9ம் தேதி வரை நடக்கிறது.தினமும் காலை 6:00 முதல் 8:30 மணி வரை, பகல் 10:00 மணி முதல் 12:30, மாலை 6 :30 மணி முதல் இரவு 9:00 வரை வகுப்புகள் நடக்கிறது.
முன் பதிவிற்கு 98940 22800, 83000 16000 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.