பதிவு செய்த நாள்
23
மே
2017
01:05
கோபி: கோபி பாரியூர், பச்சமலை முருகன் கோவிலில், மழைவேண்டி, நேற்று காலை சிறப்பு பூஜை, யாகம் நடந்தது. இதேபோல் பவானி, சென்னி மலையிலும் வருண ஜெபம் நடந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில், நேற்றிரவு பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. கோபியில் இரவு, 7:40 மணிக்கு தொடங்கிய மழை, அரை மணி நேரத்துக்கும் மேல் கனமாக கொட்டித் தீர்த்தது. அதன் பிறகும் தூறலாக தொடர்ந்தது. இரவு, 9:30 மணி வரை நீடித்தது. சென்னிமலை, பவானி பகுதியிலும், ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை கொட்டியது. இந்தப் பகுதிகளில், காலையில் வருண ஜெபம் நடந்த நிலையில், இரவில் மழை பெய்ததால், மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.