கருப்பத்தூர் தாழம்பூ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2017 01:06
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்து, கருப்பத்தூரில் உள்ள தாழம்பூ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து கருப்பத்தூர் பகுதியில், தாழம்பூ மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவில் முன் உள்ள, யாக சாலையில் கருப்பத்தூர் கோவில் அர்ச்சகர் செங்குட்டுவேல் அம்பி குருக்கள் தலைமையில், யாக சாலையில் புனித தீர்த்தக்குடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று காலை, 9:35 மணியளவில் மாரியம்மன் கோவில் கோபுர சலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, லாலாப்பேட்டை, கொடிக்கால் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் செய்தார்.