பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
01:06
குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்., தாளியாம்பட்டி ஆலமரத்து செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 12 காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் மாலை, 6:00 மணியளவில் விக்னேஸ்வர் பூஜை, வாஸ்து சாந்தி உட்பட உபசார வழிபாடு நடந்தது. நேற்று காலை, 10:30 மணியளவில் விக்னேஸ்வர் பூஜை, தீபாராதனை மற்றும் கோபுரத்தில் இருந்த கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. வைகைநல்லூர், சத்தியமங்கலம், கருப்பத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.