முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே எருதங்குளத்தில் எருதாருடைய அய்யனார் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு யாக கால பூஜைகள், அனுக்ஞை, பூர்ணாகுதி, கோமாதா பூஜைகளுக்குபின், தட்சணாமூர்த்தி, ஆஞ்சனேயர், முருகன், விநாயகர், கருப்பணசாமி கோயில்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைக்கு பின் எருதாருடைய அய்யனாருக்கு கலச நீர் ஊற்றபட்டு, மண்டலாபிஷேகம் நடந்தது.