வேலாயுதம்பாளையம்: புகழிமலை பாலசுப்ரமணி ஸ்வாமி கோவிலில் நடந்த ஐப்பசி மாதம் கிருத்திகை விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிப்பட்டனர்.கிருத்திகையை முன்னிட்டு கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் உச்சி கணபதி, பாலசுப்ரமணிய ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. வேலாயுதம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் ஸ்வாமிக்கும், கிருத்திகை விரதம் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.