பதிவு செய்த நாள்
17
நவ
2011
11:11
சேலம்: சேலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில், மண்டல பூஜை இன்று துவங்கி, டிசம்பர் 27 வரை நடக்கிறது.சேலம்- பெங்களூரு பைபாஸ் ரோட்டில் உள்ள ஐயப்பா ஆஸ்ரமத்தில், இன்று மண்டல பூஜை துவங்குவதையொட்டி மகர விளக்கு பூஜை, உற்சவ பூஜை, ஆராட்டு, மகரஜோதி, திரு ஆபரண தரிசனம் ஆகியன நடக்கிறது. மண்டல பூஜை துவக்கத்தை முன்னிட்டு, இன்று முதல் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடக்கிறது. மாலையில் புஷ்பாஞ்சலி, அலங்கார பூஜை, பகவதி சேவை ஆகியன நடக்கிறது. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நிறைவு நாளில் அஷ்டாபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியன நடக்கிறது. 28ம் தேதி மகர விளக்கு பூஜை துவங்குகிறது.ஜனவரி 1ம் தேதி அதிகாலையில் புத்தாண்டை முன்னிட்டு மஹா கணபதி ஹோமம், விசேஷ அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடக்கிறது. 8ம் தேதி மகா கணபதி ஹோமம், அபிஷேக அலங்கார தீபாராதனை, ஐயப்பன் சமூக லட்சார்ச்சனை, உஷ பூஜையை தொடர்ந்து உற்சவ பூஜைகளுக்கு பின் கச்சேரி நடக்கிறது. 12ம் தேதி வரை மாலையில் பகவதி சேவை, விசேஷ அலங்கார பூஜை, கேரள பஞ்சவாத்தியங்களுடன் கொடி ஏற்றம், மகா தீபாராதனை நடக்கிறது. 14ம் தேதி மாலை 6 மணிக்கு டாடா காலனியில் பள்ளி வேட்டையை தொடர்ந்து பெண்கள் தாலபள்ளி (விளக்கு ஏந்தி) பஞ்ச வாத்தியங்களுடன், யானை வாகனத்தில் ஐயப்ப ஸ்வாமி ஊர்வலமாக ஆசிரமத்துக்கு எடுத்து வரப்படுகிறது. ஜனவரி, 15ம் தேதி காலையில் மகாகணபதி ஹோமம், அஷ்டாபிஷேசம், விசேஷ அலங்கார பூஜை, தீபாராதனையை தொடர்ந்து, காலை 9 மணிக்கு ஐயப்ப ஸ்வாமி பவானி கூடுதுறைக்கு ஆராட்டு விழாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மதியம், 12 மணிக்கு கொடி இறக்கமும், மாலை, 4 மணிக்கு மேல் அண்ணாபுரம் ஓம்சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, திருஆபரண பெட்டி யானை மீது ஊர்வலமாக சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்துக்கு எடுத்து வரப்படுகிறது. மாø,ல 6 மணிக்கு மேல் திருஆபரண விசேஷ அலங்கார மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மகா தீபாராதனை, வெடி வழிபாட்டை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை ஐயப்பா ஆஸ்ரம டிரஸ்ட் தலைவர் கே.பி. நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் செய்கின்றனர்.