ஸ்ரீரங்கம்: துலாம் மாதம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் பக்தர்கள் புனித நீராடினர்."நவக்கிரக நாயகர் என்ற பக்தர்களுக்கு உரியவர் சூரிய பகவான். ஒவ்வொரு ஆண்டு ஐப்பசி மாதம் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இது துலாம் மாதம் என்றழைக்கப்படுகிறது. துலாம் மாதத்தை முன்னிட்டு தினமும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் ஸ்ரீரெங்கநாதர் கோவி ல் யாணை ஆண்டாள் புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீரெங்கநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காவிரியில் நீராடினால் பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.ஐப்பசி கடைசி நாளான நேற்று திரளாக பக்தர்கள் வந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் புனித நீராடி ஸ்ரீரெங்கநாதரை மிகவும் சேவித்தனர். கடை முழுக்கு என்று அழைக்கப்படுகின்றது. காவிரியில் பக்தர்கள் திரண்டதால் பாதுகாப்புப் பணிக்கு போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் இருந்து மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் புனித நீராடினர்.