கொளஞ்சியப்பர் கோவில் உண்டியலில் ரூ.7.37 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2017 04:06
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியலில், 7 லட்சத்து 37 ஆயிரத்து 930 ரூபாய் காணிக்கை இருந்தன. விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில், ஆய்வாளர் சுபத்ரா, செயல் அலுவலர் நாகராஜ், மேலாளர் குருநாதன், கரூர் வைஸ்யா வங்கிப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டனர். அதில், 7 லட்சத்து 37 ஆயிரத்து 930 ரூபாய் ரொக்கம், 10.900 கிராம் தங்கம், 748 கிராம் வெள்ளி ஆகியன இருந்தன. மேலும், தலா 1 சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் 8 சவூதி அரேபியா நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் இருந்தன.