Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2 ஆயிரம் ஆண்டு பழமையான கல்லறை ... சுப்பிரமணி சுவாமி கோயிலில் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18ம் நூற்றாண்டு சிற்பங்கள் கோவை அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
01:08

திருப்பூர்: நெகமம் அருகே, சாலை விரிவாக்கப்பணியின் போது, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, இரண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே, தேவணம் பாளையம் அடுத்த, பட்டணத்தில், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக குழி தோண்டியபோது, மண்ணில் புதைந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

200 ஆண்டு பழமை : அதில், ஆண் ஒருவர், தன் வலப்புறத்தில் இரண்டு பெண்கள், இடது புறத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கை கூப்பியுள்ள ஆணின் பின், வேல் போன்ற ஆயுதம் உள்ளது. இடது புறம் உள்ள பெண், தன் இரு கைகளை உயர்த்தி, பொருள் ஒன்றை ஏந்தியவாறும்; வலப்புறம் உள்ள பெண், ஒரு கை மடக்கியவாறும், ஒரு கையில் குடுவையை ஏந்தியவாறும் காணப்படுகிறது. சிற்பத்தில் உள்ள ஆண், முழங்கால் வரையும்; பெண்கள், கணுக்கால் வரையும் ஆடை அணிந்து, அணிகலன்கள் சூடி காணப்படுகின்றனர். இதேபோல், மற்றொரு நடுகல் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுஉள்ளது.

கல்வெட்டு ஆய்வாளர் சுந்தரம் கூறியதாவது: பட்டணம் கிராமத்தில், ஐந்து ஆண்டுக்கு முன், சாலையோரத்தில், 3 அடி உயரத்தில் பெண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. ஒரு பெண், தன் வலது கையில் குழந்தையை அணைத்தவாறும், இருபுறத்திலும், இரண்டு மாடுகள் பெண்ணை முட்டிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தாய் தெய்வ வழிபாட்டுக்கு அடையாளமாக உள்ள இந்த சிற்பத்தின், கீழ் பகுதியை தோண்டி எடுத்து பார்த்த போது, மூன்று வரி கல்வெட்டு எழுத்துக்கள் காணப்பட்டன. அதன் அடிப்படையில், 200 ஆண்டு பழமையான சிற்பம் என தெரியவந்தது. இரு நடுகல்அதே பகுதியில், தற்போது, இரு நடுகல் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதில் உள்ள எழுத்துகள், படிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதுபோன்ற சிற்பங்களை காக்க, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar