Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்க ... செந்துறையில் 45 ஆண்டுக்கு பின்பு முத்தாலம்மன் திருவிழா செந்துறையில் 45 ஆண்டுக்கு பின்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2017
10:08

ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்திபெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கருவறையின் மேல் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி பட்டு வருவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் சதுர்த்தி விழா கடந்த ஆக.16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் எட்டாம் நாளான நேற்று மாலை 5:10 மணிக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெற்றதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகர் இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். நாளை நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar