பதிவு செய்த நாள்
20
செப்
2017
01:09
பவானி: பவானி கூடுதுறையில், காவிரி மஹா புஷ்கர விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காவிரி மஹா புஷ்கர விழா, தலைக்காவிரி முதல் ஆற்று நீர் செல்லும் பல பகுதிகளில் நடந்து வருகிறது. இதில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள, கூடுதுறை காவிரி ஆற்றில், பிரமாண்ட செட் அமைத்து, இன்று முதல், 24ம் தேதி வரை, ஐந்து நாட்கள், மஹா புஷ்கர விழா நடக்கிறது. எங்கள் பவானி பவுண்டேசன் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை, 7.00 மணிக்கு கணபதி ?ஹாமத்துடன் விழா தொடங்குகிறது. பின், பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து, ஊர்வலமாக சென்று, கொடியேற்றத்துடன், காலை, 9:15 மணிக்கு விழா துவங்குகிறது. இதை தொடர்ந்து தினசரி புனித நீராடுதல், அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரைக்கும் நடக்கிறது. பின், காவிரி அன்னைக்கு ஆரத்தி நிகழ்ச்சி மாலை, 6:30 மணியிலிருந்து, 8:00 மணிவரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி கள் நடக்கும். இரவு, 8:00 மணி முதல், 10:00 மணி வரை பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். காவிரி மஹா புஷ்கர விழாவில் சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள், துறவியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயர் அதிகாரிகள், மக்கள், பக்தகோடிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். விழாவால், கூடுதுறை பகுதி களைகட்டியுள்ளது.