கண்களை வைத்தே மனதை உள்ளதை எடை போட்டு விடலாம். வகுப்பறையில் பக்கத்தில் இருக்கும் மாணவனை அவன் அறியாமலே கிள்ளிவிட்டு, ஏதுமறியாதவன் போல் நடிக்கும் மாணவனை, ஆசிரியர் அவனது கண்களை வைத்தே கண்டுபிடித்து விடுவார். எனவே கண்கள் எப்போதும் நல்லதையே பார்க்க வேண்டும். நல்லதைப் பார்த்தால் உள்ளத்தில் நல்ல உணர்வுகள் ஏற்படும். இதையே இயேசு, கண்ணானது சரீரத்தின் விளக்காய் இருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் இருளாயிருக்கும். உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி வெளிச்சமாயிரு, என்றார்.