ஔவையார் தனது நல்வழி எனும் பாடல் தொகுப்பில் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று பாடி, கடவுள் படைத்த நானிலத்தின் பொருளை, நிலத்துக்கு ஒன்றாக காணிக்கையாகச் செலுத்துகிறார். முல்லை -பால், குறிஞ்சி -தேன், மருதம்- பாகு, நெய்தல் -பருப்பு (தேங்காய்) இவை நான்கையும் படைத்தவர் பதிலுக்கு என்ன கேட்கிறார் தெரியுமா? சங்கத் தமிழ் மூன்றையும் தா என்று கேட்கிறார்.