Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
27 முறை பாட வேண்டிய பாடல் ஐயப்பன் வரலாறு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாணம்னா....இது தான் கல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
04:11

காஞ்சிபுரம் மடத்திற்கு பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தார். இதை அறிந்த பெரியவர் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணப் போறியா? எனக் கேட்டார். ஆமாம்! என தலையசைத்தார் பக்தர். எப்படி பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணணும் தெரியுமோ? என்றார் பெரியவர். பின், வரதட்சணை கேட்காமலே பெண் வீட்டார் கொடுத்தா என்று சமாதானம் சொல்வது கூடாது. விரும்பி கொடுத்தாலும் வாங்க கூடாது. நாம கேட்காம அவாளாக் கொடுக்க மாட்டாளாங்கற எதிர்பார்ப்பை உண்டாக்குது. அப்படி எதிர்பார்ப்பு வந்தா வரதட்சணை எப்படி ஒழியும்? லஞ்சம் வாங்க மாட்டேன், அன்பளிப்புன்னா பரவாயில்லை என்று சொல்வது மாதிரி தான் இதுவும்! உம் பிள்ளைக்கு பெண் வீட்டார், நீ கட்டாயப்படுத்தாமலே வரதட்சணை கொடுத்தா, நீயும் உன் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தாமலே வரதட்சணை கொடுத்தாக வேணும் என்ற நிலை வரும்.

பெண் வீட்டார், பிள்ளையின் உறவுக்காரர்களுக்குத் துணிமணி வாங்கறது, போக்குவரத்து ஏற்பாடு பண்றது எல்லாமே தவிர்க்க வேண்டியவை தான்.  பிள்ளையோட மாமாவோ, அத்தையோ அவர்கள் சொந்தச் செலவில கல்யாணத்துக்கு வரக் கூடாதா? தங்கள் வீட்டுப்பிள்ளை கல்யாணத்துக்குக் கூட போக்குவரத்துச் செலவு பண்ண மனம் வரல்லேன்னா அது என்ன உறவு? பெண் வீட்டுக்காரர்களை சிரமப்படுத்தறதுல ஒரு அளவு இல்லைன்னு ஆயிடுத்து. யாரோ கொடுக்கிற பணத்தில, துணிமணி வாங்கறது அவமானம்ன்னு பிள்ளை  னைக்கணும். சுயமரியாதையோட தன் சொந்தச் செலவில தான் வாங்கணும். நாம செலவு பண்ணி நமக்கு துணி வாங்கிக்க வக்கில்லையா என்ன?

வரதட்சணையை நாமாக கேட்டாலும் சரி, அவர்களாக கொடுத்தாலும் சரி, அது திருட்டு சொத்து. வேண்டாம் என்று மறுக்கிற மனோபாவம் வேண்டும். நீ உன் பிள்ளைக்கு  நான் சொல்றபடி பண்ணினாத் தான், கல்யாண பத்திரிகைல வரும், பரமாச்சாரியார் அனுக்ரஹத்தோடு என்ற வார்த்தைக்கு அர்த்தமிருக்கும். கல்யாணம்னா.... இது தான் கல்யாணம்...! என்றார் பெரியவர். திருப்பூர் கிருஷ்ணன்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar