பதிவு செய்த நாள்
13
நவ
2017
01:11
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, கழுவன் சுவாமி கோவில் திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை அருகே, பிள்ளபாளையம் செல்லும் சாலையில், கழுவன் சுவாமி கோவில் உள்ளது. கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், திம்மாச்சிபுரம், லிங்கத்தூர் முதலான கிராமங்களைச் சேர்ந்த குடிபாட்டுக்காரர்கள், இக்கோவிலில் திருவிழா நடத்துகின்றனர். இதன்படி, நேற்று காலை, 9:30 மணியளவில், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, ஆடு பலியிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.