பதிவு செய்த நாள்
16
நவ
2017
01:11
பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், 22ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவில். இந்த கோவில் வளாகத்தில் உள்ள, அய்யப்பன் கோவிலில். 22ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, வரும், 18ம் தேதி நடைபெற உள்ளது.அன்று காலை, 6:00 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன், திரு விளக்கு பூஜை துவங்குகிறது.
காலை, 8:00 மணிக்கு, காமாட்சி உடனுறை சோளீஸ்வரர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு பால் அபிஷேகமும், அதை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது.மாலை, 5:00 மணிக்கு, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலிலிருந்து, 108 திருவிளக்குடன், அய்யப்பன் கோவிலுக்கு ஊர்வலம் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில், அய்யப்பன் வீதி உலாவும் நடைபெறும். இரவு, 10:00 மணிக்கு, படி பூஜையும், விசேஷ தீபாராதனையும், ஜோதி தரிசனமும் நடைபெறும்.