மதுரை;மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி ஸ்ரீசங்கர மடத்தின் வளாகத்தில் பித்ருக்களுக்கான திவச மண்டப திறப்பு விழா நாளை(நவ.,22) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. நிர்வாகி கவுரிசங்கர் கூறியதாவது: ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமி, ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமி கட்டளைப்படி, மடத்தின் வளாகத்தில் பக்தர்கள் தங்களின் பித்ருக்களின் ஆண்டு திவசம், மகாளய பூஜை செய்வதற்கு வசதியாக 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டபம் கட்டப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் எட்டு பேர் பித்ரு காரியம் செய்யக்கூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மண்டபம் திறப்பு விழா நாளை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடக்கிறது, என்றார்.