திருப்பதி சீனிவாசரை மணந்த லட்சுமி திருச்சானூரில் பத்மாவதியாக கோயில் கொண்டிருக்கிறாள். பத்மாவதி என்பதற்கு தாமரையில் பிறந்தவள் என்பது பொருள். பத்மாவதியை அலமேலு மங்கை என சொல்வது வழக்கம். அலர் மேல் மங்கை என்பதே அலமேலு என சுருங்கி விட்டது. இதற்கு தாமரையை இருப்பிடமாக கொண்டவள் என பொருள்.