சிவன் கோயிலை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?
மும்முறை வலம்வந்தால் நினைத்து நடக்கும். 5 முறை வலம்வந்தால் - வெற்றி கிடைக்கும். 7 முறை வலம்வந்தால் - நல்ல குணம் உண்டாகும். 9 முறை வலம்வந்தால் - குழந்தை பாக்கியம் உண்டாகும். 11 முறை வலம்வந்தால் -நீண்ட ஆயுள் கிட்டும். 13 முறை வலம்வந்தால் - வேண்டுதல் விரைவில் நிறைவேறும். 15 முறை வலம்வந்தால் - செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும். 17 முறை வலம்வந்தால் - செல்வம் பெருகும். 108 முறை வலம்வந்தால் - அஸ்வமேத யாகம் செய்த பலன். 1008 முறை வலம்வந்தால் - ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்.