Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபத் திருநாளில்.... இடுக்குப் பிள்ளையார்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேடி வந்தாள் அம்பிகை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2017
05:11

ஒருமுறை பார்வதியும் பரமேஸ்வரரும் திருக்கயிலையில் விளையாட்டாக உரையாடிக் கொண்டிருந்தனர். இறைவனாரின் திருக்கண்களைப் பற்றி அம்பாள் வினவ, அவையே சூரியனும் சந்திரனும் என்று விடையளித்தார் பரமன். அதே விளையாட்டில் ஐயனுடைய கண்களைப் பொத்தி அம்பாள் சிரிக்க. ஐயனும் சிலிர்த்துப் போனார். இருப்பினும் அந்தச் சில கணங்கள் உலகம் இருளுக்குள் மூழ்கியதைக்கண்ட கருணை நாயகி. உயிர்களுக்கு அதனால் ஏற்படட தவிப்புக்குப் பிராயச்சித்தம் தேட விழைந்தாள். ‘தவம் செய்ய வேண்டும்; தக்க இடம் எது?  அம்மை கேட்க, ‘காஞ்சிபுரம்’ என்றார் சிவனார். காஞ்சிக்கு வந்து அங்கே மணலால் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள் அம்மை. அம்பாளின் அன்பை உலகுக்குக் காட்டும் விதத்தில் சிவனார் திருவிளையாடல் நிகழ்த்த, கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

ஆற்று வெள்ளத்தில் தன் அருமைபெருமையாக அமைத்த மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்று பதறிய அம்பாள். அப்படியே அதை ஆலிங்கனம் செய்து ‘விடமாட்டேன்’ என்று பற்றிக்கொண்டாள். அம்பாளின் பிடியில் ஐயனும் இறுகிக்கொள்ள ஐயனுக்குத் ‘தழுவக் குழைந்தநாதர்’ எனும் சிறப்புத் திருநாமமே ஏற்பட்டது. அம்பாளுக்கு நெருடல் ஓயவில்லை. ஐயனிடமிருந்து பிரிந்து தனியாக இருப்பதால்தானே இந்த நிலைமை! அவருடைய திருமேனியுடன் ஒன்றிவிட்டால்...? இந்த எண்ணம் உருவானவுடன் அம்மை. ஐயனை வேண்டினாள். கயிலையை விடவும் உயர்ந்த காஞ்சி; அதை விடவும் உயர்ந்த தலத்தில் தவம் செய்யும்படி ஐயன் ஆணையிட்டார். அத்தகைய தலம்தான் திருவண்ணாமலை. தம்மை வழிபடாமல், சிவனாரை மட்டுமே வலம் வந்து வழிபட்டுச்சென்ற பிருங்கி முனிவரின் செய்கையால் வருந்திய அம்பிகை, சிவனும் சக்தியும் வேறு வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினாள். அதன்பொருட்டு இந்தத் தலத்துக்கு வந்து விரதமிருந்து வழிபட்டு, இறைவனின் திருமேனியில் வாம பாகத்தைப் பெற்றதாகவும் ஒரு திருக்கதை உண்டு.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar