Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள்! துளசிமாலை அணிவது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரார்த்தனையின் பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
03:11

வஞ்சமின்றி வணங்குமின் என்கிறது திருநாவுக்கரசரின் தேவாரம். உள்ளன்புடன் செய்யப்படும் எந்தப் பிரார்த்தனையும் இறைவனின் காதுகளுக்கு நிச்சயம்  எட்டும். பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு இரங்கியும் இறங்கியும் வருபவன் இறைவன். இறைவனை வணங்குவது என்பது, பிறரிடம் எதையேனும் எதிர்பார்த்து  அவரை வணங்குவது போன்றது அன்று. இறைவனிடம் மனம் திறந்து பேசுவதுதான் பிரார்த்தனை. பிரார்த்தனை என்பது இறைவனிடம் பிச்சை கேட்பதல்ல. அது  ஆன்மா அருள் தாகத்துடன் இறைவனுடன் தொடர்புகொள்வதாகும். பிரார்த்தனை போன்றவற்றால் கிடைக்கும் உன்னதமான அனுபவங்கள்தான், வாழ்க்கையில்  அர்த்தமுள்ள அத்தியாயங்கள். ஆன்மிக வாழ்க்கையில் பிரார்த்தனை: ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படையே பிரார்த்தனைதான் என்பதை அனுபவத்தில் நாம்  உணர்கிறோம்.

உயர்ந்த நன்மைகள் என்று எத்தனை உண்டோ, அத்தனையையும் பிரார்த்தனைகளின் மூலம் நாம் பெற முடியும். மனிதனை, மனிதன் என்ற நிலையிலிருந்து, தெ ய்வநிலைக்கு உயர்த்தும் ஏணியாக பிரார்த்தனை அமைந்திருக்கிறது. தீய மனம் படைத்தவர்கள், தாழ்ந்த உள்ளம் கொண்டவர்கள் உலக ஆசைகளை அனுபவிப் பதற்காக மட்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். தூய உள்ளம் கொண்டவர்கள். நிரந்தரமான ஆன்மிக நன்மைகளைத் தந்தருளும்படி இறைவனிடம் பி ரார்த்தனை செய்து பெற்றுவிடுவார்கள். பிரார்த்தனையின் மூலம் நாம் எதையெல்லாம் பெற விரும்புகிறோமோ, அதையெல்லாம் நாம் இறைவனிடமிருந்து  கண்டிப்பாகப் பெற முடியும். ‘நாம் எதையெல்லாம் நம் பிரார்த்தனையின்போது கேட்கிறோமோ, அதையெல்லாம் இறைவன் வழங்குவார்’ என்ற முழு நம்பி க்கையுடன், நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். கள்ளங்கபடமின்றி குழந்தை மனப்பான்மையுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். உத்த  பக்தர்கள் இறைவனிடம் வேறு எதையும் கேட்காமல், இறைவனையே கேட்டுப் பிரார்த்தனை செய்வார்கள்.

உலகியல் பிரார்த்தனை: பொதுவாக உலக மக்கள் “இறைவா! எனக்கு வீடு இல்லை; வீடு கொடு இறைவா! எனக்கு நோய் வந்திருக்கிறது; இந்த நோயை நீக்கு  இறைவா! எனக்கு வேலையில்லை; வேலை கொடு, இறைவா! எனக்குக் கல்யாணம் ஆகவில்லை; உடனே அதற்கு ஏற்பாடு செய்” போன்ற ரீதியில் பி ரார்த்தனைகளைச் செய்கிறார்கள்; இப்படியெல்லாம் பிரார்த்தனை செய்வதுதான் பிரார்த்தனை என்றும் நினைக்கிறார்கள். இது போன்ற பிரார்த்தனைகள் சுயநலம்  கலந்த காமிய பிரார்த்தனைகள் ஆகும். இறைவன் கற்பகமரம் போன்றவன். எனவே அன்பர்களின் காமிய பிரார்த்தனைகளையும் அவன் நிறைவேற்றி  வைக்கிறான்.

ஆன்மிக நலனுக்குப் பிரார்த்தனை: உயர்ந்த சாதகர்கள் இறைவனிடம் காமியப் பிரார்த்தனைகள் செய்வதில்லை. மாறாக அவர்கள் தூய பக்தி ஞானம் விவேகம்,  வைராக்கியம் சரணாகதி போன்றவற்றைத் தந்தருளும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இவர்களின் பக்திமயமான இந்தப் பிரார்த்தனைகளையும்  கற்பக தருவான இறைவன் நிறைவேற்றி வைக்கிறான். “இறைவா! எனக்கு உலக போகங்களை அதிகமாகத் தந்து கர்மங்களை அதிகமாக்கி விடாதே! உன்னை  மறக்கும்படி செய்யாதே!” என்பன போன்ற பிரார்த்தனைகள் ஆன்மிக நலனுக்கு உகந்தவை ஆகும். தீவிர அருள்தாகத்துடன், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து  செய்யப்படும் பக்தி மயமான பிரார்த்தனையால் இறைவனை அடைய முடியும். தன் பக்தனை இறைவன் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.

பொறுமை தேவை: ‘பிரார்த்தனை செய்த உடனேயே பலன் கைமேல் வந்துவிட வேண்டும் ” என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. பொறுமையுடன் பிரார்த்தனையை  தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒர் ஆன்மிக சாதனை என்ற வகையில் பிரார்த்தனை சாதகர்களின் வாழ்க்கையில் தலையாய முக்கியத்துவம்  பெறுகிறது. இதில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதற்கும் அதிக முக்கிய இடம் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையைச் சரியாகப் புரிந் துகொள்ளாமல் காத்திருக்கும் பொறுமை இல்லாதவர்கள் சிறிது காலம் பிரார்த்தனை செய்துவிட்டு, ‘என் பிரார்த்தனை நிறைவேறவில்லை ’ என்று பிரார்த்தனை  செய்வதையே கைவிட்டு விடுவதும் உண்டு இது சரியான முறையல்ல.

மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை: இறைவனிடம் தங்களுக்காக மட்டும் பிரார்த்தனை செய்யாமல், அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்பவர்களாக அரு ளாளர்கள் இருப்பார்கள். இதை சாதகர்களாகிய நாம் பயிற்சி செய்வது நல்லது. தனக்காக என்று இல்லாமல் பிறர் நலனுக்கு என்று ஒருவர் உண்மையிலேயே மனப் பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால், அதற்கு நிச்சயம் பலன் உண்டு. என்பது ஐதிகம். இன்னொரு விஷயம் நாம் பிரார்த்தனை செய்வது காரணமாக மற்றவர்களுக்கு  நன்மை ஏற்படுகிறதோ  இல்லையோ, நமக்கே அதனால் நன்மை ஏற்படும்; நமது மனம் பண்படும் என்பது சர்வ நிச்சயம். துன்பத்தில் இருப்பவர்களுக்காக, நோ யால் வருந்துபவர்களுக்காக, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்தால், அது போன்ற நிலைகள் நமக்கு ஏற்படுமானால் நமக்காக  எவராவது பிரார்த்தனை செய்வார்; நமக்கு எவராவது உதவி செய்வார். இது பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யப்படும் காமிய பிரார்த்தனை.

தனிமையில் பிரார்த்தனை:  தேர்விற்காகத் தனித்திருந்து கல்வியில் கவனம் செலுத்தும் மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். தனித்தி ருந்து ‘சாதகம் பழகுதல் ’ என்ற இசைப் பயிற்சியை மேற்கொள்ளும் பாடகர்களுக்கு கச்சேரிகளில் நல்ல பாராட்டுக் கிடைக்கிறது. தனித்திருந்து ஆராய்ச்சிக்  கூடத்தில் இரவும் பகலும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள். பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து உலக நலனுக்கு வழங்குகிறார்கள். இது ÷ பான்ற எத்தனை எத்தனையோ துறைகளில் இருப்பவர்கள் தனிமையில் இருந்து தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால், தாங்கள் மேற்கொண்டிருக்கும்  துறைகளில் வெற்றிவாகை சூடி வருவதை நாம் அனுதினமும் பார்த்து வருகிறோம். இந்த உண்மை ஆன்மிகத்திற்கும் பொருந்தும். பாலை உறையூத்தித் தனியாக  வைத்தால், அது தயிராகும். அதுபோல் ஆன்ம பலம் பெறுவதற்கு ஏகாந்தம் (தனித்திருந்து தவம் பழகுதல்) முற்றிலும் அவசியம். பிரார்த்தனைக்குப் பயன்படும்  நல்ல கருத்துக்கள்: இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற சில கருத்துகளை இங்கு நான் குறிப்பிடுகிறேன். இறைவா! என்னுடைய கடந்த கால வினைகள்,  நிகழ் கால வினைகள், எதிர் கால வினைகள் ஆகியவற்றை உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். என்னை இந்த வினைகளிலிருந்து விடுவித்து, எனக்கு இந்தப்  பிறவியிலேயே முக்தி தந்து அருள்புரியுங்கள். இறைவா! எனக்கு விவேகம் தந்தருளுங்கள். என்னை எப்போதும் விவேக வழியில் அழைத்துச் செல்லுங்கள்.

எல்லாவிதமான உலக ஆசைகளிலிருந்தும், உலகப் பற்றுகளிலிருந்தும் என்னை அறவே விடுவித்து எனக்கு அருள் புரியுங்கள். எல்லாவிதமான மாயையிலிருந் தும், அஞ்ஞானத்திலிருந்தும் என்னை விடுவித்து அருள் புரியுங்கள். ஒரு சிறிய தவறும், ஒரு சிறிய பாவமும் இல்லாத அறவழியில், ஆன்மிக வழியில் என்  கையைப் பிடித்து என்னை எப்போதும் அழைத்துச் செல்லுங்கள். ஞானம் உள்ள வாழ்க்கையாக என் வாழ்க்கை எப்போதும் இருப்பதற்கு அருள்புரியுங்கள்.  என்னுடைய ஸ்தூல கர்மங்களையும், சூட்சும கர்மங்களையும், காரண நிலையிலுள்ள கர்மங்களையும் உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். இந்தக்  கர்மவினைகள் எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுவித்து, இந்தப் பிறவியிலேயே எனக்கு முக்தி தந்தருளுங்கள். விபீஷணனுக்கு ராமரின் திருவடிகளில் இருந் ததைப் போன்று, உங்கள் திருவடிகளில் எனக்குப் பூரண சரணாகதி இருக்கும்படி அருள்புரியுங்கள். ஆஞ்சநேயருக்கு ராமரின் திருவடிகளில் இருந்ததைப் போன்ற  பூரண சரணாகதியை, உங்கள் திருவடிகளில் எனக்குத் தந்தருளுங்கள். அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் சமயத்தில் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் இருந்தது போன்று,  உங்கள் திருவடியில் எனக்குப் பூரண சரணாகதியைத் தந்தருளுங்கள். உங்கள் திருவடிகளில் தூய, உண்மையான, பூரண சரணாகதியை எனக்குத் தந்தருளுங்கள்.

எந்த நிலையிலும் புலனடக்கம் கொண்ட வாழ்க்கையாக, என் வாழ்க்கை அமைந்திடுவதற்கு அருள் புரியுங்கள். உங்களுடைய ஆன்மிக வாரிசு, ஆன்மிகப் பிரதி நிதி என்ற வகையில், என் வாழ்க்கை பரமபவித்திரமாக எப்போதும் விளங்க வேண்டும் என்று அருள்புரியுங்கள். நான் எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இ ருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் என்னை உங்கள் தெய்வீகப் பாதுகாப்பில் வைத்திருங்கள். ‘நான் எனது’ என்ற அகங்காரம் மமகாரம் நீங்கிய வாழ்க்கைய õக, என் வாழ்க்கை அமைவதற்கு கருணைபுரியுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar