Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கனகன கிண்டி! வயதில் சிறிய துறவிகளை பெரியவர்கள் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பனை மரத்தின் சிறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
04:01

பாரத தேசத்தின் தொன்மையான மரங்களில் பனையும் ஒன்று. கண்ணபிரானின் அண்ணனாகிய பலராமன், பனை மரத்தைக் கொடியாகக் கொண்டிருந்தான் என்கிறது மகாபாரதம். தாலம் என்ற பனையின் பெயராலேயே திருமணத்தில் சூடும் மங்கல அணி தாலி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். பனை ஓலையைச் சுருட்டி காதணியாக அணிவார்கள். இது, ஓலைக்குழை எனப்படும். பனங்குலைகளும், பனம்பூக்களும் மங்கலச் சின்னங்களாகும். விழா நாட்களில் வாழை மரங்களுடன் தென்னங்குலைகளையும் பனங்குலைகளையும் கட்டுகின்றனர். பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் பனையபுரம், பனங்காடு, திருப்பனையூர், திருப்பனைந்தாள், திருஓத்தூர் ஆகிய ஐந்தும் பனை மரங்களை தலமரமாகக் கொண்டவை.

தெருவடிச்சான் அல்லது சகோபுரம் என அழைக்கப்படும் பெரிய சப்பரங்கள் பனை ஒலைகளைக்கொண்டே அலங்கரிக்கப்படுகின்றன. இதுபோன்று ஓலைப் பல்லக்கும் உண்டு. பனை ஓலைகளில் செய்யப்பட்ட பைகள், பெட்டிகள் புனிதம் மிக்கவையாகப் போற்றப்படுகின்றன. ஆசார சீலர்கள், தமது உடைகளை மாசுபடாமல் வைத்திருக்க, அவற்றை பனை ஓலைகளால் ஆன குடலைகளில் வைத்திருந்தனர். அவை, மடிசஞ்சி எனப்பட்டன. காசியின் காவல் தெய்வங்களில், தாலஜங்கேசுவரி என்ற பெண் தெய்வம் வேருடன் பிடுங்கிய பனை மரத்தையே ஆயுதமாகக் கொண்டிருக்கிறாள். தமிழகத்திலும் பனையடி முனீஸ்வரர், பனையாத்தம்மன் போன்ற கிராமிய தெய்வங்கள் உண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar