தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு இது. மூலவரை தனது பாடல்களில் ‘சித்தன்’ என்று அவ்வையார் அழைக்கிறார். தமிழ் இலக்கியங்களில் ‘சித்தன் வாழ்வு’ என சிறப்புடன் அழைக்கப்படுகிறது. சேர, பாண்டிய மன்னர்கள் போற்றிய திருத்தலம். முருகனை அன்போடு நினைப்பவர்க்கு, ஆராத முக்தி தரும் தலம். பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் உள்ள தலம். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினமும் தங்கத்தேர் இழுப்பது இங்கு தான். ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம். தமிழக கோயில்களில், அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை தரும் முதல் கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்பு, சேரமான் பெருமான் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது. அக்னி நட்சத்திரத்தில் கிரிவலம் பழநியில் எல்லா நாட்களிலும் கிரிவலம் வரலாம் என்றாலும், அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. ஏனெனில், இந்த மலையே ஒரு அருமருந்தாக அமைந்துள்ளது. வெப்ப நோய்களில் இருந்து காத்துக்கொள்ள அக்னி நட்சத்திர கிரிவலம் நல்லது.