ஈரோடு சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயிலில் வீடு கட்டுவதற்காக பக்தர்கள் வித்தியாசமான வழிபாடு செய்கிறார்கள். மலைக்குச் செல்லும் வழியில் இடும்பன் சன்னதி இருக்கிறது. இதனருகே அவ்வையார், முருகன் சிலைகள் உள்ளது. இங்கு பக்தர்கள் கற்களை அடுக்கி வைத்து சுவாமியை வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தங்களது வீடு கட்டும் கனவு நிறைவேறும் என நம்புகின்றனர். திருப்பதி மலை ஸ்ரீவாருபாதம் பகுதியில், இதேபோல கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் உண்டு.