364 ஆண்டுகளுக்கு முன்பு உருவான கந்த சஷ்டி கவசத்தை அனைவரும் பாராயணம் செய்கின்றனர். இந்த நூல். மைசூரு மன்னர் தேவராய உடையார் கி.பி., 1654ல் சென்னிமலை ஆண்டவர் கோயிலில் திருப்பணி செய்வதற்காக நியமித்த தேவராய சுவாமிகள் இதைப்பாடினார். ‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் இந்த பாராயணம், நோய், பயம் தீர்க்கும் மந்திர நூலாகும். இக்கவசத்தை நெஞ்சில் பதிய வைப்போருக்கு துன்பம் நீங்குவதோடு, செல்வம் பெருகும்.