ராசி பலனை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பலர். பூர்வஜென்ம பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்கிறது ஜோதிடம். ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. ‘கந்தர் அலங்காரம்’ நூலில், முருகனை வழிபடுபவர்களை ‘நாளும் கோளும்’ நன்மை செய்யும் எனக் கூறுகிறது.