Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நினைத்தது நிறைவேற... இப்படியும் ஒரு பக்தர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீர் தோன்றிய திருநாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
01:01

ஓர் யுகத் தோற்றத்தின்போது, தைப்பூச தினத்தில்தான் நீர் தோன்றியது: நீரிலிருந்தே மற்ற அனைத்துயிர்களும் தோன்றின என்கின்றன ஞானநூல்கள். இதை உணர்த்தவே தைப்பூச நாளில் கோயில்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நீரில் -தெப்பப் பந்தலில் ஈசனும், இறைவியும், முருகனும் உலா வரும் வைபவம், படைப்பின் ரகசியத்தை எடுத்துரைக்கவே என்பது பெரியோர் வாக்கு.

அன்னை பார்வதிதேவி மைந்தன் முருகனுக்கு வெற்றியை அளிக்க வல்ல வேலாயுதத்தை உருவாக்கித் தந்து ஆசி வழங்கியது ஒரு தைப்பூசத் திருநாளில்தான். முருகனுக்குப் பின்னர் தோன்றியதால் சக்தி வேல் முருகனுக்கு தங்கை முறையானது என்று சுவாரஸ்ய விளக்கம் தருவார்கள். சான்றோர்கள். அதனாலேயே கந்தனின் சக்தி வேலினை ‘ஷண்முகி ’ என்றும் போற்றுவர். எதிரிகளை வெல்வதற்கு மட்டுமல்ல, அருணகிரியர், குமரகுருபரர் முதலான அடியார்களின் நாவில் அட்சரம் எழுதி, ஞானத்தை அளித்ததும் இந்தக் குமரவேல்தான்.

பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு பகவான். ஞானமே வடிவான முருகப்பெருமானை சிறப்பிக்க தைப்பூச நாளை அர்ப்பணித்தார். குரு பகவான். அதனால் இந்த தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், முருகப்பெருமானையும், தேவகுருவான பிரகஸ்பதியையும் வணங்கித் தியானிப்பதும் நன்மையைத் தரும்.

தோஷங்கள் நீக்கும் நாளாக தைப்பூசம் விளங்குகிறது. வியாஜன் (வஜன்) என்ற ஆதிகாலச் சோழ மன்னன் ஒருவன், விதிவசத்தால் தவறுதலாக அப்பாவி அந்தணரைக் கொன்றுவிட்டதால் பாவத்துக்கு ஆளானான். அதனால் உண்டான தோஷம் நீங்க. பார்கவ முனிவரிடம் சென்று வழி கேட்டான். திருவிடைமருதூரில் அருளும் சிவபெருமானைத் தைப்பூச நன்னாளில் சென்று வழிபடுமாறு மன்னருக்கு அறிவுறுத்தினார் முனிவர். அதன்படியே செய்து நலம் பெற்றான் மன்னன்.

காலவரிஷியை அவமதித்த நந்தினிப் பசு, தவறை உணர்ந்து தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள வழிபட்ட தலமும் திருவிடைமருதூர்தான். அப்படி அந்தப் பசு வழிபட்ட தினமும் தைப்பூசமே. மன்னன் வரகுணபாண்டியனும் ஒரு தைப்பூச நன்னாளில் திருவிடைமருதூருக்குச் சென்று வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றதாக திருவிடைமருதூர் தலவரலாறு கூறுகிறது. தைப்பூசத்தன்று திருவிடைமருதூருக்குச் செல்ல முடியாவிட்டாலும், அருகிலுள்ள சிவன்கோயிலுக்குச் சென்று அம்மையப்பனையும், கந்தப்பனையும் வணங்கி வழிபட்டு, சகல தோஷங்களும் நீங்கப்பெற்று, சந்தோஷ வாழ்வைப் பெறலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar