பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, ஸ்ரீவில்லி புத்துார் ஜீயர் சந்தித்து பேசினார்.ஆண்டாள் குறித்து, கவிஞர் வைரமுத்து தவறாக பேசியதாக, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. ஆண்டாள் சன்னதியில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற விஜயகாந்தும், ஜீயருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தார். இந்நிலையில், தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த விஜயகாந்தை, சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஜீயர் நேற்று சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது, அட்சதை துாவி, விஜயகாந்தை ஜீயர் ஆசிர்வசித்தார். உங்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும் என்றும், விஜயகாந்திடம் கூறினார். - நமது நிருபர்