மாசி முதல் ஞாயிறு: ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2018 12:02
குமாரபாளையம்: குமாரபாளையம் அக்ரஹாரம், லட்சுமி நாராயண சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் மாசி மாத முதல் ஞாயிறு முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று பக்தி பாடல்கள் பாடி, இறைவனை வணங்கினர். சுவாமிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.