பதிவு செய்த நாள்
19
பிப்
2018
12:02
சேலம்: தண்டாயுதபாணி கோவிலில் நடந்த திருப்படி பூஜையில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாசி முதல் ஞாயிறு முன்னிட்டு, சேலம், குமரகிரி, தண்டாயுதபாணி கோவிலில், 32ம் ஆண்டு படிபூஜை விழா நேற்று நடந்தது. அதையொட்டி, அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. பின், சுவாமிக்கு ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. அங்கிருந்து, பக்தர்கள் ஊர்வலம் புறப்பட்டு, செங்குந்தர் மேட்டுத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, விவேகானந்தர் தெரு, குமரகிரி ஏரி வழியாக, குமரகிரி தண்டாயுதபாணி கோவிலை அடைந்தனர். பின், அங்குள்ள, 60 படிகளில், மஞ்சள், குங்குமம், பூ வைத்து, திருப்புகழ், தேவாரம் பாடி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.