Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப ... செம்பை சங்கீத உற்சவம் துவக்கம் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
எழுத்தின் அளவு:
திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
10:02

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான பணியிலிருந்து, வேற்று மத ஊழியர்களை நீக்க, தேவஸ்தானத்திற்கு ஐதராபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது. ஆந்திராவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், தற்போது, ஹிந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த, 45 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஹிந்த தார்மீக நிறுவனமான தேவஸ்தானத்தில், வேற்று மதத்தவர் பணியாற்ற கூடாது என, 2007 முதல், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களை மட்டுமே தேவஸ்தானம் நியமித்து வருகிறது.

இந்நிலையில், ’தற்போது பணிபுரிந்து வரும், 45 ஊழியர்களையும், தேவஸ்தான பணியிலிருந்து நீக்கி, அவர்கள் வகித்து வரும் பணிக்கு தகுந்தபடி, அரசு பணி வழங்க வேண்டும்’ என, தேவஸ்தானம் முடிவு செய்தது. இது குறித்து, ஆந்திர மாநில அரசிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், தேவஸ்தான அதிகாரிகளின் இந்த முடிவுக்கு, அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், ’தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களும், மனதால் ஹிந்து மதத்துக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்து, ஏழுமலையான் மீது, பயபக்தியுடன் பணியாற்றி வருகிறோம். ’அதனால், எங்களை தேவஸ்தான பணியிலிருந்து நீக்க தடை விதிக்க வேண்டும’ என, 45 ஊழியர்களும் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள், தேவஸ்தான பணியிலிருந்து, வேற்று மத ஊழியர்களை நீக்க தடை விதித்து, உத்தரவு பிறப்பித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் ... மேலும்
 
temple news
போத்தனூர்; தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அஷ்டமி. முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. மதுக்கரை ... மேலும்
 
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar