கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நந்திக்கு நேற்று மாலை 5:00 மணியளவில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், தேன், திரவியபொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் ஆராதனை செய்து; அருகம்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், மகாதீபாராதனை நடந்தது. அதில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதேபோல், நல்லுார் வில்வவனேஸ்வரர் கோவில், முதனை முதுகுன்றீஸ்வரர் கோவில், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடந்தன.