திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: தீபம் ஏற்றும் பெண்களுக்கு வேலித் தடுப்புகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2018 02:02
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பக்குளக்கரையில் தீபம் ஏற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக போலீசார் தகடுகளால் வேலி அமைத்து தனி,தனி அறைகளாக உருவாக்கியுள்ளனர்.
திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவத்தின் சிறப்புக்களில் பெண்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றவும், நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தும் பெருமாளுக்கு விளக்கேற்றுவதே. குளக்கரை தடுப்புச் சுவர்கள் முழுவதும் தீபம் ஏற்ற மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மைக்காலமாக குளக்கரையில் தீபம் ஏற்றுவது அதிகரிகத்து வருகிறது. ஆனால் பெண்கள் முன்னும் பின்னுமாக அமர்ந்து தீபம் ஏற்றும் போது உடையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதும் தொடர்கிறது. இதைத் தடுக்க தற்போது போலீசார் முழு கவனம் செலுத்தியுள்ளனர். படித்துறையினுள் இறங்கி தீபம் ஏற்றப்படுவதை தவிர்க்க தகடு வேலியால் ப டித்துறையை அடைத்தும், குளத்தைச் சுற்றிலும் சதுரம் சதுரமாக தகடு வேலி அமைத்து அதனுள் பெண்கள் பாதுகாப்பாக தீபம் ஏற்றுவதை கண்காணிக்க வசதியாக அமைத்துள்ளனர். நேற்று பெண்கள் அதிகளவில் தீபம் ஏற்றி பெருமாளை வழிபட்டனர். குளக்கரை மட்டுமின்றி கோயிலுனுள் பிரகாரத்தில் உள்ள வில்வ மரத்தினடியில் அனைத்து சுவாமிகளுக்குமான தீப பிரார்த்தனையிலும் பெண்கள் விளக்கேற்றி வழிப்பட்டனர்.