நத்தம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம் சென்றார். கடந்த பிப்.,19 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டி விரதம் துவங்கினர். பிப்.,23ல் அம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம் சென்றார். விழாவின் 9ம் நாளான நேற்று முன்தினம் இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் சிம்ம வாகனத்துடன் நகர்வலம் சென்றார். வருகிற மார்ச் 6 அன்று கழுமரம் ஏற்றத்தை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். மறுநாள் மஞ்சள் நீராட்டு, பூப்பல்லக்கில் அம்மன் நகர் வலத்துடன் விழா நிறைவடைகிறது.