கீழக்கரை, உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நடராஜருக்கு மாசி சதுர்த்தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வருடத்திற்கு 6 முறை உற்ஸவர் நடராஜருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கம். இவற்றில் வருடம் ஒரு தடவை ஆருத்ரா தரிசனத்திற்கு மட்டும் மூலவர் மரகத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். மீதமுள்ள 5 முறைகளிலும் ஆடவல்லான் உற்ஸவர் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் 18 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. சிவனடியார்கள், பக்தர்கள் திருவாசகம் முற்றோதல், சிவநாம அர்ச்சனை செய்தனர். மாலை 6 மணிக்கு பல்லக்கில் உள்பிரகார வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.