Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ... திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் காகித ஆலையில் உலக நன்மைக்காக மஹா நவசண்டி யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
12:01

வேலாயுதம்பாளையம்: காகித ஆலை குடியிருப்பு பகுதியில் உள்ள வல்லப கணபதி கோவிலில் உலக நன்மைக்காக ஐந்தாவது ஆண்டாக மஹா நவசண்டியாக விழா நடந்தது. காகிதபுரம் காகித ஆலை எதிரில் உள்ள குடியிருப்பில் வல்லப கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டி ஸ்ரீவிக்னேஸ்வர், துர்க்கை அம்மனுக்கு ஐந்தாம் ஆண்டாக மஹா நவசண்டியாக யாகம் 28ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கப்பட்டு, மஹா ஸங்கல்பம், புண்யாஹவாசனம், வாஸ்து சாந்திபலி பூøஐ, தீபாராதனை ஆகியன நடந்தது. மறுநாள் காலை விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரக அஸ்தர ஹோமம், சுதர்சன ஹோமம், சர்ப்ப சாந்தி ஹோமம், மாலையில் புண்யாஹவாசனம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், மிருத்சங்கிரகணம், சண்யாக கலச ஸ்தாபனம், தேவிமஹாத்மிய பாராயணம், முதலாம் கால யாக ஹோமம் தீபராதனை நடந்தது இரண்டாம் காலயாக பூஜையாக தேவிமஹாத்மிய பாராயணம், அத்யாய ஹோமம், சுமங்கலிபூஜை, தம்பதிபூஜை, மாங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் ஸ்வாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை காகித ஆலை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar